
"தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம்
வாடித்துன்பமிக உழன்று - பிறர்
வாடப்பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கைமனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரேஇன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத்தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப்புதியவுயி ராக்கி - எனக்
கேதுங்கவலையறச் செய்து - மதி
தன்னைமிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!"

No comments:
Post a Comment