Sunday, December 06, 2009

கடைசி ஆசை



இறைவா
சாவின் விளிம்பில்
நிற்கும் என்னிடம்
கடைசி ஆசை கேட்காதே
வாழவிரும்பும் நான்
மீண்டும் செத்து போவேன்
அவளால்.....

கருப்பு தேவதையே !!



கரு விழிகளில் தினம்
கரு மை பூசி
கருத்த கூந்தலில்
கருமை தெரிய வாரி ,
தினம் ஒரு கருப்பில் புடவை உடுத்தும்
நீ
காதலிக்க
எனது கருப்பு போதாதா ?

நான் தெரியவில்லையா ?



வாஸ்தவம் போல் பேசி
வசியம் செய்யும்
வன்முறையாளன் தெரிந்த
உனக்கு ...
அதிகம் பேசாது
உன் ஆழ விழிகளில்
என்னை தேடும்
நான் தெரியவில்லையா ?

Sunday, September 06, 2009

என் தங்கைக்காக !!

யாருமற்ற சாலையில்.....
என் ஒற்றை விரல் நுனி பிடித்து,
உன் எதிர் காலத்தை
என் தேடலில் வைத்து,
எனக்கு அநீத பொறுப்பு தந்து,
என்னை தவிர
சந்தோசம் மட்டுமே உன் சொந்தமாக
என்னுடன் பயணிக்கும் நீ
என் தங்கை மட்டுமல்ல
என் குழந்தையும் கூட.......

உன் பந்தம் இனிமை தான்!
ஆனால்.....
உயிருக்குள் பெரும் பாரத்தை
அல்லவா ஏற்படுத்துகிறது......



Friday, September 04, 2009

லஞ்சம்


மந்திரம் ஓத பூசாரிக்கு
தவறாமல் பத்து ரூபாய்
தரும் அப்பா.
விஷேச நாட்களில்
மறக்காமல் மஞ்சள் துணியில்
காசு முடியும் அம்மா .
வீட்டு பூச்செடிக்கு
நாள் தவறாமல்
நீர் ஊற்றிக்கொண்டு நான் !

Friday, July 31, 2009

மழை


சுகமாய் தொட்டணைத்த
தூரத்து மேகத்தின் தூரல்கள்
இதமாய் இதயம் இறங்குவதற்குள்
இடி !

Tuesday, February 17, 2009

என்னவளின்.....


அந்தி வானம்
அட்சய பாத்திரம் ஏந்தி
பிச்சை கேட்டதாம்
என்னவளின்
சிரித்து சிவந்த கன்னத்தின்
சிவப்பை பூசிக்கொள்ள !

அடி பூ பெண்ணே ..


மலரென்று நினைத்து
மலட்டு வண்டும் உன்னுள்
மகரந்த சேர்க்கையிட்டு
கருத்தரித்து விடாமல்
பார்த்துக்கொள் !!
மலருக்கும் மெல்லிய மேனி உண்டாமே ?

Sunday, February 15, 2009

சுஜாதா ஒரு சகாப்தம்


தமிழில் தனக்கென
தனி இடமிண்டு இவருக்கு !
சம்பவங்களை சாதூர்யமாய் விவரிக்கும்
சாமர்த்தியசாலி இவர் !
ஆதி முதல் அந்தம் வரை
பயணித்திருக்கிறது இவர் எழுத்து !
ரத்தம் ஒரே நிறம் மற்றும் நனோதொழில்நுட்பம்
அதன் எடுத்துக்காட்டு !
இவர்
இலக்கியம் படித்த விஞ்ஞானி..
காதலிக்கும் ரோபோ..
ஜீன் படிக்கும் ஆழ்வார்..
வானில் நீந்தும் சுறா..
வேதம் வடித்த கடவுள் ....
இன்னும் சொல்லி போகலாம் !
அவர் படைப்புகள்......
இன்னும் எந்த நூற்றாண்டு வாழ்
தமிழனுக்கும் ஓர் முன்னோடி !!!!
அது
தமிழ் உள்ளவரை வாழும் !!!!!

Saturday, February 14, 2009

நீ தான் என் எல்லாம்


எட்டாத சிகரம் ஏறி
கொடி நட்ட தெரியாதெனக்கு
ஆழ் கடல் மூழ்கி
முத்தெடுக்க தெரியாதெனக்கு
வானவில்லை
வளைக்கவும் தெரியாது
விண்மீன்கள்
பறிக்கவும் தெரியாது
சாகசம் எதுவும் தெரியாது
எனக்கு தெரிந்த இசையில் சொல்கிறேன்
நீ தான் என் எல்லாம் என்று !

என் தலைவன் பாரதி


"தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம்
வாடித்துன்பமிக உழன்று - பிறர்
வாடப்பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கைமனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரேஇன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத்தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப்புதியவுயி ராக்கி - எனக்
கேதுங்கவலையறச் செய்து - மதி
தன்னைமிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!"

என் காதலின் ஒலி

என்னை கூர்பார்த்த

என் காதலின்

ஒலி வடிவும் இது !

இயலாமை


தாகம் தணிக்கயியலா
பனித்துளி
புல்லின் நுனியில்
அழகு செய்து
என்ன பயன் ?

என் நண்பன்


வினாக்கள் எழுப்பும் முன்னே
விடையை தந்த அழகிய உறவு
இவனுடனானது....
ஒரு மிச்சிறிய ஆரத்தில்
மையம் இவனென வரையபற்றிகிறது
என் நட்பு வட்டம்.
என் சந்தோசங்கள்
என் கோபங்கள்
என் நன்றிகள்
என் துக்கங்கள்
என் ஆறுதல்கள்
பகிர்ந்தளிக்க என் தெய்வம்
தந்த மிகப்பெரிய பரிசு இவன் !
சூரியகீற்று இவனிருக்க
மின்மினிகளை தேடியிருக்கிறேன் !
அதற்காக இவனது மன்னிப்புகளை
இவன் அனுமதி இன்றி பெறுகிறேன்!
டேய் நண்பா ! என் முடிவு வரை என் தொடக்கமாய் இரு

Wednesday, February 11, 2009

நீயும் நானும்

வாய் ஊமையான பிறகு
உன்னுடன் பேச தொடங்குகிறது மனது !!!

புரியாத தமிழ் இலக்கணம்
உனகென எழுதுகிற போது
நாய்குட்டி ஆகிறது !!

எட்டாத நொடிகளை
ஏலனம் செய்கிறது
உன் நினைப்பு !!!

உன்னை போல உள்ள அனைத்தும்
என் சொந்தமாகின்றன !!!

உன் சில புன்னகைகள் மட்டும்
கடன் கொடு !!!
வட்டியும் முதலுமாய் தருகிறேன் !!!!!

உன்னிடம் இணையும் போது
சொல்ல படுகிற காதல்
ரயில் சத்தத்தில் கரயபடுகிறது !
இணைந்தும் பயனில்லாமல்
நீயும் நானும் பாலங்களாய்!

மன்மதராசா

பின்னொரு இரவில்
புறவழி சாலையில்
பகிரங்க ஆளுமைக்கு உட்படுத்த
பயமில்லா பரவசத்தோடு
பழுக்கு முன்னே
பந்திக்கு வந்த
பந்தய புரவிகளை
பல்லிழுத்து புசிக்க
பசியோடு காத்திருக்கம்
மன்மதராசா எய்ட்ஸ் !