Wednesday, February 11, 2009

நீயும் நானும்

வாய் ஊமையான பிறகு
உன்னுடன் பேச தொடங்குகிறது மனது !!!

புரியாத தமிழ் இலக்கணம்
உனகென எழுதுகிற போது
நாய்குட்டி ஆகிறது !!

எட்டாத நொடிகளை
ஏலனம் செய்கிறது
உன் நினைப்பு !!!

உன்னை போல உள்ள அனைத்தும்
என் சொந்தமாகின்றன !!!

உன் சில புன்னகைகள் மட்டும்
கடன் கொடு !!!
வட்டியும் முதலுமாய் தருகிறேன் !!!!!

உன்னிடம் இணையும் போது
சொல்ல படுகிற காதல்
ரயில் சத்தத்தில் கரயபடுகிறது !
இணைந்தும் பயனில்லாமல்
நீயும் நானும் பாலங்களாய்!

7 comments:

  1. வாய் ஊமையான பிறகு
    உன்னுடன் பேச தொடங்குகிறது மனது !!!
    irumanangal pesum pothu vaiku angu velai illamal pogirathu.. nallairuku

    ReplyDelete
  2. என்னதான் 'நம்' எண்ணங்கள் ஒன்றாய் இருந்தாலும் இறைவனின் தீர்ப்பில்?? இருவரும் இணைய முடியா இரு துருவங்களாய்!!!!
    "நீயும் நானும்"
    இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  3. "உன்னை போல் எத்தனையோ உறவுகள் வரலாம் ஆனால் அத்தனையும் நீயாக முடியாது" உன்னை போல உள்ள அனைத்தும்
    என் சொந்தமாகின்றன !!! இத நான் ஒத்துக மாட்டேன்

    ReplyDelete
  4. நம் மனதால் இணைந்த பிறகு நம் காதுகளுக்கு அங்கு என்ன வேலை???
    நம்மை எந்த சத்தம் என்ன செய்துவிட முடியும்!!!!!.

    ReplyDelete
  5. நீங்க ஒத்துக்க முடியாத தத்துவத்தின் சாராம்சம்
    "நோக்குகின்ற திசையெல்லாம் தெரியும் நீ
    என் சொந்தமாவது ஆச்சரியமில்லையே ?!"

    ReplyDelete
  6. அது ரயிலுக்காக மட்டுமே இணைக்கப்பட்டு
    பின் பிரிக்கப்படும்
    இரு பாலங்களின் குமுறல் !

    ReplyDelete