
வினாக்கள் எழுப்பும் முன்னே
விடையை தந்த அழகிய உறவு
இவனுடனானது....
ஒரு மிச்சிறிய ஆரத்தில்
மையம் இவனென வரையபற்றிகிறது
என் நட்பு வட்டம்.
என் சந்தோசங்கள்
என் கோபங்கள்
என் நன்றிகள்
என் துக்கங்கள்
என் ஆறுதல்கள்
பகிர்ந்தளிக்க என் தெய்வம்
தந்த மிகப்பெரிய பரிசு இவன் !
சூரியகீற்று இவனிருக்க
மின்மினிகளை தேடியிருக்கிறேன் !
அதற்காக இவனது மன்னிப்புகளை
இவன் அனுமதி இன்றி பெறுகிறேன்!
டேய் நண்பா ! என் முடிவு வரை என் தொடக்கமாய் இரு

உன் நட்பிற்கு என் "முதல்மரியாதை"
ReplyDeleteநட்பிற்கு எல்லை இல்லை என்பது என் கருத்து!!!
ReplyDeleteசூரியகீற்றையும் மேக கூட்டங்கள் மறைத்துவிடும்!!!!!
ReplyDeleteஅப்பொழுது இந்த மின்மினிகளும் தேவைப்படும்!!!!!
மின்மினிகள் நிலை இல்லாதது !
ReplyDeleteசூரியன் நிரந்தரம் !
அந்த வரிகளின் மூலம் "எனக்கு என்றும் அவன் நட்பு மட்டுமே நிரந்தரம்" என்பதே !!!